புற்தரை! வெள்ளை உடை! டை ப்ரேக்கர் வித்யாசம்! என கடந்த வாரம் முழுவதும் விம்பிள்டன் பேச்சு தான். கால்பந்து உலகக்கோப்பை ஒருபுறமிருக்க விளையாட்டு பிரியர்களால் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாக வந்து சேர்ந்த விம்பிள்டன் நமக்கு பல ஆச்சரியங்களை அளித்தது. அரை இறுதியில் பெடரர் இல்லை. இறுதிப் போட்டியில் நடால் இல்லை. ஆனால் விருவிருப்பிற்கு பஞ்சமில்லாதாக ஒரு தொடராக அமைந்தது இந்த வருட விம்பிள்டன்.

அதற்கு முக்கிய காரணம் தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த கெவின் ஆண்டர்சன். 32 வயதான இவர் 7 அடி உயர்த்துடன் டென்னில் உலகில் அவ்வப்போது பேசப்படும் ஒரு வீரராக வலம் வருபவர். இவர் விம்பிள்டன் இறுதி போட்டிக்கு முன்னேறி அனைவரையும் வாய்பிளக்க வைத்தார். ஏனெனில் 2007 முதல் தொழில் முறை டென்னிஸ் ஆடி வரும் இவர் இரண்டு முறை மட்டுமே கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இரண்டிலும் தோல்வியே தழுவியுள்ளார்.

சென்ற வருடம் அமெரிக்க ஒப்பனில் ஒரு இறுதிப் போட்டி, தற்போது விம்பிள்டனில் ஒரு இறுதிப் போட்டி! அவ்வளவே, இவரது சாதனைகள். ஆனால் இவர் சர்வசாதாரணமாக இறுதிப்போட்டியில் நுழைந்துவிடவில்லை, அரை இறுதியில் உலகின் 8ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்நெருடன் சுமார் ஆறரை மணி நேரம் போராடி அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார்.

இதுவே விம்பிள்டன் வரலாற்றில் மூன்றாவது அதிக நேரம் நடந்த போட்டி ஆகும். மேலும், 20 கிரான்ட்ஸ்லாம் வென்ற ஜாம்பவான், ரோஜர் பெடரரை காலிருதியில் வீழ்த்திவிட்டுத்தான் அரை இறுதிக்கே வந்தார் என்பதை நாம் மறவக்கூடாது. இப்படி ஒரு மிகத் திறம் வாய்ந்த வீரர் கெவின். உலகின் டாப்-5ல் உள்ள வீரர் இவர். அப்படி என்றால் யோசித்துக்கொள்ளுங்கள் இவரது திறம் பற்றி! இதே கெவின் ஆண்டர்சன் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் ஏபி டி வில்லியர்சிடம் நேர் செட்களில் தோற்றுள்ளார் என்பதை நம்ப முடிகிறதா?

ஆனால் அதுதான் உண்மை. 360° டி வில்லியர்ஸ் தனது சிறு வயதில் இருந்தே அனைத்து விளையாட்டுகளிலும் மிகவும் நுணுக்கமான திறமைகளை வளர்த்துள்ளார். தென்னாப்பிரிக்க நாட்டின் பிரபலமான ரக்பி, கிரிக்கெட் , டென்னிஸ், நீச்சல், பேட்மிண்டன் என அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கியுள்ளார் இந்த மல்டி-டாஸ்க் மன்னன். செய்தி என்னவென்றால் கெவின் ஆண்டர்சன் தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்.

ஏ.பி.டி ஜூனியர் லெவலில் தேசிய அணிக்காக டென்னில் ஆடிய போது மறுபுறம் இருந்த கெவின் ஆண்டர்சனை நேர் செட்களில் தட்டி தூக்கியுள்ளார் அசுரன் ஏபிடி. இது குறித்து கெவின் ஆண்டர்சன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது :- ஏபிடி ஒரு மிகச்சிறந்த டென்னிஸ் வீரர். என்னைவிட அவர் 2 வயது மூத்தவர். ஜூனியர் டென்னிஸ் அணியில் ஆடிய போது முக்கியமான ஒரு போட்டியில் என்னை நேர் செட்களில் தோற்கடித்து நாக்-அவுட் செய்தவர் அவர்.

நல்ல வேலை அவர் கிரிக்கெட்டின் பக்கம் திரும்பிவிட்டார். இல்லை எனில் எனக்கு ஒரு மிகப்பெரிய தலைவலியாக இருந்திருப்பார். என ஒருவிதமான புன்னகையுடன் உண்மையை கக்கினார் கெவின். இந்த மனிதர் ஏபிடி இன்னும் எத்தனை சாதனைகளை மறைத்து வைத்துள்ளாரோ தெரியவில்லை. அந்த ஆண்டவனுக்கே அது வெளிச்சம்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here