கிரிக்கெட் உலகின் கடவுள் என்ற அழைக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்திற்கு வெளியே ரேடியோ விற்பனை செய்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி துவங்குவதற்கு முன்பு இருந்தே லார்ட்ஸில் மழை பெய்து வருவதால் லார்ட்ஸ் மைதானத்தை மைதான ஊழியர்களுடன் இணைந்து சுத்தம் செய்ததன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனதையும் வென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், தற்போது லார்ட்ஸ் மைதானத்திற்கு வெளியே ரேடியோ விற்பனையாளராக மாறியுள்ளார்.

இதை பார்த்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அர்ஜுனிடம் பெரும்பாலான ரேடியோக்கள் விற்றுவிட்டன. சில மட்டுமே கையிருப்பில் உள்ளன என்று கிண்டலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here