கடந்த மாதம் கால்பந்து உலகில் பரபரப்பாக பேசப்பட்டது போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ரியல் மாட்ரிட் கிளப் விட்டு இத்தாலி நாட்டின் முன்னணி கிளப் ஆன ஜுவென்டஸ் அணிக்கு சென்றது தான்.

இவர் ஜுவென்டஸ் அணிக்கு ஆண்டுகள்  112 மில்லியன் யூரோ அளவிற்கு எடுக்கப்பட்டார். இது ரியல் மாட்ரிட் ரசிகர்களால் பெரிதும் ஏமாற்றமும் வருத்தமும் ஏற்படுத்திய ஒன்றாக இருந்தது.

இந்நிலையில், ரொனால்டோ நேற்று ஜுவென்டஸ் அணிக்கு தனது முதல் போட்டியை அதே கிளப் அண்டர் 21 அணிக்கு எதிராக ஆடி சிறப்பாகவும் கோல் அடித்தார்.

போட்டி முடிந்த பிறகு இங்கு நான் குடும்பம் போல் உணர்கிறேன் என சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டிருந்தார். இது ஸ்பெயின் நாடு ரசிகர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை உண்டாக்கியது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, UEFA சூப்பர் கோப்பை இறுதி போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை எதிர்கொள்ளும் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டன் செர்கியோ ராமோஸ் கூறியதாவது, ரொனால்டோ இல்லை என்றால் என்ன? நாங்கள் குடும்பமாக செயல்படுகிறோம். இதற்க்கு மேல் என்ன வேண்டும் வெற்றி பெற! மிக பெரிய வீரரை இழந்தது வருத்தம் தான், இருந்தாலும் அது எங்கள் வெற்றியை தடுக்காது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here