ரோஜர்ஸ் கோப்பைக்கான இறுதி போட்டி கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்றது. இதில் உலகின் நம்பர் 1 வீரரான நடால், இளம் வீரர் ஸ்டெபினோஸ் சிட்சிபஸ் இருவரும் மோதின.

இதில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், அனுபவம் மிக்க வீரர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் தட்டி சென்றார்.

இந்த ஆட்டம் வெறும் 41 நிமிடங்களே நடைபெற்றது. மைதானத்திற்கு வந்த ரசிகர்கள் ஆட்டம் எளிதில் முடிந்ததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

சீட்சிபஸ் ஒன்றும் அவ்வளவு எளிதான வீரர் அல்ல, இவர் லீக் மற்றும் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களில் பல முன்னணி வீரர்களை வென்று தான் இறுதி போட்டிக்கு வந்துள்ளார். ஆனால், நடாலை அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here