ராஜ்கோட்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி 85 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய வங்கதேசம் 153/6 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 154/2 ரன்களை எடுத்து வென்றது.

இந்நிலையில், பிசிசிஐக்காக சுழற்பந்துவீச்சாளர் சஹாலுக்கு ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் அடித்தபோது, ஆறு சிக்ஸர்களை அடிக்க எண்ணினேன். ஆனால் நான்காவது சிக்ஸரைத் தவற விட்ட பிறகு சிங்கிள்ஸ் எடுக்க முயன்றேன். மிகவும் பலசாலியாக இருந்துதான் சிக்ஸர் அடிக்க முடியும் என்பதில்லை. நீங்கள் (சஹால்) கூட சிக்ஸர் அடிக்கலாம். சிக்ஸ் அடிக்க பலம் மட்டுமே போதாது, சரியான டைமிங்கிலும் அடிக்கவேண்டும். தலை சரியான நிலையுடன் இருக்கவேண்டும். பந்து பேட்டின் நடுவில் பட வேண்டும். எனவே ஒரு சிக்ஸர் அடிக்க பல விஷயங்கள் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here