கோடிப் கோப்பை தொடரில் (20 வயது) இளம் இந்திய அணி, 6 முறை ‘ஜூனியர்’ உலக கோப்பை வென்ற அர்ஜென்டினாவை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது.

மர்சியா (0–2), மர்டானியா (0–3) அணிகளுக்கு எதிராக தோற்ற இந்திய அணி, வெனிசுலா அணிக்கு எதிராக (0–0) ‘டிரா’ செய்தது. நான்காவது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. 2006 உலக கோப்பை தொடரில் விளையாடிய லியோனல் ஸ்கலோனி அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தார்.

போட்டியின் 4வது நிமிடம் கிடைத்த ‘கார்ன் கிக்’ வாய்ப்பில் இந்திய வீரர் நின்தோயின்கன்பா அடித்த பந்தை தீபக் டாங்கிரி தலையால் முட்டி கோல் அடித்து அசத்த முதல் பாதியில் இந்திய அணி 1–0 என முந்தியது. இரண்டாவது பாதியில் 54வது நிமிடம் அனிகீத் ஜாதவுக்கு ‘‘ரெட்’ கார்டு காட்டப்பட, இந்திய அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இருப்பினும் மனம் தளராத இந்திய அணி வீரர்கள் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தினர். அர்ஜென்டினா அணியின் அடுத்தடுத்த தாக்குதலை கோல் கீப்பர் கில் தடுத்து கலக்கினார். போட்டியின் 68 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ‘பிரீ கிக்’ வாய்ப்பு கிடைத்தது.

இதில் அன்வர் அலி கோல் அடிக்க இந்தியா 2–0 என முன்னிலை பெற்றது. பின் அர்ஜென்டினா தரப்பில் ஆலன் ஒரு கோல் அடித்தார். மீண்டும் கோல் அடிக்க அர்ஜென்டினா அணி வீரர்கள் எடுத்த முயற்சிகளை இந்திய வீரர்கள் தடுத்தனர். முடிவில் இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, வரலாறு படைத்தது.வ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here