டெஸ்ட் தொடரில் உள்ள சுவாரசியம் என்னவென்றால் டெஸ்ட் போட்டிகள் துவங்கும் முன்னர் வீரர்கள் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் போர் நடத்திக் கொள்வார். அதிலும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற அணிகள் மிகவும் உக்கிரமாக மைண்ட் கேம் விளையாடுவர். இதன் மூலம் எதிரணி வீரரின் நம்பிக்கையை குறைக்க முயற்சி செய்வார்கள்.

போட்டி துவங்கும் முன்னரே ‘அவர் ஆடமாட்டார்’ ‘இவர் இப்படிச் செய்வதற்கு தகுதி இல்லாதவர்’ என்ற தர குறைவான வார்த்தைகளை கூறி இதுபோன்ற தாக்குதல்களை ஆரம்பித்து வைத்து எதிரணி வீரர்களின் ஆட்ட நம்பிக்கைகளை குழைப்பார்.

தற்போது அந்த வேலையை தொடங்கியுள்ளார் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆகஸ்டு 1ஆம் தேதி துவங்குகிறது உலகமே இந்த போட்டித் தொடரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் விராட் கோலி பற்றி ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

அவர் கூறியதவது…

அதாவது விராட் கோலி தான் அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அணி வெற்றி பெற்றால் போதும் என்று கூறுவார். ஆனால் அது உண்மை அல்ல அது அவர் கூறும் பொய்யாகும். அவர் சென்ற வருடம் இங்கிலாந்து வந்திருந்த போது எப்படி சோதப்பினார் ர்ன்று நாம் பார்த்தோம். அதில் இருந்து மீண்டு வந்திருப்பார் என நம்புவோம் இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய சாதனைதான் என விராட் கோலியை தூண்டியுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதற்கு இந்திய கேப்டன் விராட் கோலி என்ன பதிலடி கொடுப்பார் என்று சில நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here