வியட்நாம் ஒபன் ஆண்களுக்கான சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் வியட்நாமில் நடைபெற்று வருகின்றன. இந்த சாம்பியன்ஷிப் தொடர் அரையிறுதியை எட்டிய நிலையில், இதில் இந்தியாவின் அஜய் ஜெயராம் மற்றும் யூ இகிராசி இருவரும் மோதின. சில மாதங்களாக தசை பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அஜய் ஜெயராம், இந்த தொடரில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

அதே சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த அஜய் ஜெயராம், அரையிறுதியிலும் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். இவர் 21-14,  21-19 என்ற நேர் செட் கணக்கில் யூ இக்கிராசியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here