இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி அருவியில் கூலாக குளியல் போடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் ராஞ்சியில் உள்ள ஒரு அருவியில் தான் குளியல் போட்ட வீடியோவை தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அருவியில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ள தோனி, 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அருவிகளில் குளித்து மகிழ்வதாகவும் பழைய நல்ல நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வருவதாகவும் கூறியுள்ள தோனி, தனக்கே உரிய பாணியில் கிண்டலாக, ஃப்ரீ ஹெட் மசாஜ் செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here