இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. பர்மிங்காமில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், நேற்று ஆட்டம் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோனதான் ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில், ஷிகர் தவன், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, சட்டேஷ்வர் புஜாரா மற்றும் குல்தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முரளி விஜய்யும், கே.எல்.ராகுலும் ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில், ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் முரளி விஜய் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில், ராகுல் 8 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து மழைக் காரணமாக ஆட்டம் சிறிதுநேரம் தடைப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு, ரன் அவுட் ஆனார் புஜாரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here