பவுண்டரி லைனில் செம கேட்ச் பிடித்த முருகன் அஸ்வின் தமிழ்நாட்டில் நடக்கும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது இந்தப் போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கம் அணியும் காரைக்குடி காளை அணியும் சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதின இந்த போட்டியில். இந்த போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி.

ஆனால் இந்த போட்டியில் சுவாரசியம் என்னவென்றால் சென்னை அணியின் கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த் நடித்த ஒரு சிக்சர் பவுண்டரி லைனில் இருந்து லாவகமாக கேட்ச் பிடித்த முருகன் அஸ்வின் செய்த செயல்தான்.

26 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அபார ஆடிக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த் 18-வது ஓவரில் ஒரு பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார் இந்த பந்து கிட்டத்தட்ட பவுண்டரி லைனை தாண்டிச் சென்றுவிட்டது. ஆனால் லாங்-ஆனில் இருந்து ஓடிவந்த முருகன் அஸ்வின் எட்டிக் குதித்து அந்த பந்தை அற்புதமாக பிடித்தார் பிடித்த வேகத்தில் பவ்ண்டரிக்கு பின்னால் சென்ற அவர் பவுண்டரி லைனை தொடும்  முன்னரே பந்தை வெளியே வீசி விட்டு பின்னர் மீண்டும் உள்ளே வந்து செம்மையாக பிடித்தார் அந்த வீடியோ கீழே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here