ஐரோப்பா சாம்பியன் லீக் கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட் அணியும், ஐரோப்பா லீக் கோப்பையை வென்ற அட்லெடிகோ மாட்ரிட் அணியும் ஐரோப்பா சூப்பர் கோப்பையின் இறுதி போட்டியில் மோதின.

இதில் 2016, 2017 ஆம் ஆண்டு ஐரோப்பா சூப்பர் கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட் அணி இந்த ஆண்டும் கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கலாம்  முனைப்புடன் ஆடியது.

பரபரப்பாக துவங்கிய ஆட்டத்தின்  நிமிடத்திலேயே அட்லெடிகோ அணி கோல் அடித்து அசத்த, ரியல் மாட்ரிட் அணி செய்வதறியாது திகைத்தது. 27 வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் பென்சீமா கோல் அடித்து 1-1 என சமன் செய்தார்.

இரண்டாவது பாதியை துவங்கிய இரு அணிகளும், முன்னிலை வகிக்க கடுமையாக போராடியது. 63வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் கேப்டன் ராமோஸ் பெனால்டி கோல் அடித்து அணியை முன்னிலைக்கு எடுத்து சென்றார். இதற்க்கு அட்லெடிகோ வீரர் டியாகோ கோஸ்டா தக்க பதில் கொடுத்து 2-2 என சமன் செய்தார்.

மேலும், ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு செல்ல, அட்லெடிகோவின் நிகுயெஸ் கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். அதன்பின்  ஸ்பெயின் வீரர் கோகி 104வது நிமிடத்தில் இன்னொரு கோல் அடித்ததால் அட்லெடிகோ அணி 4-2 என்ற கணக்கில் வென்றது.

இந்த தோல்வி மூலம் ரியல் மாட்ரிட் அணி ஹாட்ரிக் வெற்றி பெரும் வாய்ப்பை இழந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here