இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி துவங்குகிறது இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் மிகத் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.  இந்திய அணி கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கு வந்து ஆடியது அப்போது அவ்ந்த அணியை விட தற்போது வந்துள்ள இந்திய அணி சற்று பலம் வாய்ந்த அணியாக உள்ளது. 2014ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை தவிடுபொடியாக்கி அந்த டெஸ்ட் போட்டியில் வென்றது இந்திய அணி.

 

இந்த போட்டியில் வெல்வதற்கு காரணமாக இருந்தவர் இஷாந்த் ஷர்மா. அந்த போட்டியில் மட்டும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக. இருந்தார் தற்போது மீண்டும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கு இந்த முறையும் அதே போன்று வெற்றியை தேடித்தருவேன் எனவும் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்வேன் என வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here