அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கணைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2017ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கணைகளுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது.

இதில் 2017ம் ஆண்டுக்கான ஆடவர் பிரிவில் சிறந்த வீரர் என்ற விருதை இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி வென்றுள்ளார்.

இவர் முன்னதாக இவ்விருதை 2007, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் பெற்றிருக்கிறார். இதன் வரிசையில் தற்போது 2017ல் நான்காவது முறையாக பெற்றுள்ளார்.

மேலும் கால்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வரும் சுனில் சேத்ரி கடந்த ஆண்டு பெங்களுர் கால்பந்து அணிக்காக 26 போட்டியில் பங்கேற்று 20 கோல்களை அடித்து அசத்தினார்.

மேலும் கடந்த ஆண்டு நடந்த ஐஎஸ்எல் தொடரில் பெங்களூர் அணியை இறுதி போட்டிக்கு வரை எடுத்துச்சென்றார்.

இதனையடுத்து சுனில் சேத்ரி கடந்த ஜூன் மாதம் நடந்த இண்டர்காண்டினென்டல் கோப்பையில் 4 போட்டியில் பங்கேற்று இந்திய அணிக்கு 8 கோல்களை அடித்து கோப்பையை வெல்ல உதவினார்.

இவரைத்தொடர்ந்து மகளிர் பிரிவில் கமலா தேவி 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீராங்கணைக்கான விருதை பெற்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here