டெஸ்ட் போட்டிகளின் சிறப்பம்சமாக கருதப்படும் ஆஷஸ் தொடர் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இங்கிலாந்தில் இன்று வெளியிடப்பட்டது.

கடந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இம்முறை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதற்க்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது.

உலகக்கோப்பை போட்டிகள் வருட துவக்கத்தில் வருவதால், அதன்பிறகு ஆஷஸ் போட்டிகள் நடக்குமாறு அட்டவணைகள் உருவாக்கபட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் துவங்கி செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஆஷஸ் தொடருக்கான போட்டி அட்டவணை:-

முதல் டெஸ்ட் – ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை- எட்ஜ்பாஸ்டன்
2-வது டெஸ்ட் – ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை – லார்ட்ஸ்
3-வது டெஸ்ட் – ஆகஸ்ட் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை – ஹெட்லிங்லே
4-வது டெஸ்ட் – செப்டம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை – ஓல்டு டிராஃப்போர்டு
5-வது மற்றும் கடைசி டெஸ்ட் – செப்டம்பர் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை – ஓவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here