21 ஆண்டுகால கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளார் பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 210 ரன்கள் குவித்ததன் மூலம் முந்தைய சாதனையை தகர்த்துள்ளார் இந்த இளம் வீரர் இதற்கு முன்னர் பாக்கிஸ்தானின் சயீத் அன்வர் 1997 ஆம் ஆண்டு 196 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது

 

அதாவது ஒரு நாள் போட்டிகளில் ஒரு பாகிஸ்தான் வீரர் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும் நேற்றைய போட்டியில் அடித்து துவம்சம் செய்த ஜமான் இந்த 21 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் இதனால் இவருக்கு பல்வேறு தரப்பிலிரந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

 

இந்தப் போட்டியில் 156 பந்துகளுக்கு 210 ரன்கள் குவித்து அசத்தினார் ஜமான் மேலும் இந்த ஆட்டத்தில் 24 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் அடங்கும் இவர் இடது கை ஆட்டக்காரர் ஆவார் கடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதமடித்து அசத்தியவரும் இவரே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here