2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்காக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியின் வீரர்களை மற்ற அணிகளில் இருந்து வர்த்தகம் செய்து கொள்ளலாம். அதேபோல் தங்கள் அணியில் இருக்கும் வீரர்களையும் விற்றுக்கொள்ளலாம்.

முறையான ஏலம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி துவங்கும். அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் கட்டாயம் 5 வீரர்களை வெளியேற்றியே ஆக வேண்டும்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வெளியேற்றப்படும் 5 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முன்னணி வீரர்களான சாம் பில்லிங்ஸ், மோகித் சர்மா, டேவிட் வில்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் இளம் வீரர்களான துருவ் ஷோரே மற்றும் சைதன்யா பிஷ்னொய் இருவரும் இடம்பெற்றிருந்தன.

வருகின்ற ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை எடுப்பதற்காக சென்னை அணிக்கு 14 கோடி மீதம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here