இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இப்போட்டி ஹெட்டிங்கிலேயில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களான குல்படின் நைப் (15) ரஹ்மத் ஷா (35) ரன்களுடன் வெளியேறினர். இதன் பின் களமிறங்கிய ஹஷ்மதுல்லா ஷாஹிடி முதல் பந்திலே வெளியேறினார். அஸ்கர் ஆப்கான் (42), முகமது நபி (16), சாமியுல்லா ஷின்வாரி (19), நஜிபுல்லா சத்ரான் (42), இக்ரம் அலி கில் (24), ரஷீத் கான்(8), ஹமீத் ஹாசன் (1), முஜீப் உர் ரஹ்மான் (7) ரன்கள் குவித்தனர். இதில் முஜீப் மற்றும் ஷின்வாரி விக்கெட் இழக்காமல் இருக்கின்றன. 50 ஓவர்கள் முடிவில் 227 ரன்கள் பெற்று 9 விக்கெட்களை இழந்துள்ளனர்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்களையும் இமாத் வாசிம், ரியாஸ் தலா 2 விக்கெட்களையும் பெற்றுள்ளனர்.

Shaheen afridi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here