இங்கிலாந்து , ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 399 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக வைத்தது.

ஆனால் ஆஸ்திரேலியா அணி 263 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை வெற்றி பெற்றதால் போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இந்த தொடர் முடிந்ததன்  மூலம் டெஸ்ட் போட்டியின் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.அதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் வார்னர் 6 -வது இடத்தில் இருந்து 24 வது இடத்திற்கு சரிந்து உள்ளார். மரன்ஸ் 97-வது இடத்தில் இருந்து 35 வது இடத்திற்கு முன்னேறினார். ஸ்மித் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் கம்மின்ஸ் முதல் இடத்திற்க்கு முன்னேறி உள்ளார்.ஆஷஸ் தொடரில் முதல் போட்டி முடிந்த போது ஆர்ச்சர் 83 வது இடத்தில் இருந்தார். ஆஷஸ் போட்டி முடிந்த பிறகு 37 வது இடத்திற்கு முன்னேறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here