தல தோனி தான் கேப்டன்; சண்டை இழுத்து விட்ட பி.சி.சி.ஐ

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை இன்னும் கேப்டன் என இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதை இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றியது. இதில் முன்னாள் கேப்டன் தோனியின் ஆமை வேக பேட்டிங் குறித்து பலரும் தாறுமாறாக கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் வெற்றிக்கு கொஞ்சம் கூட முயற்சிக்காத வயதான தோனி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துக்களை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ஓய்வு சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும் முன்னாள் கேப்டன் தோனியை இன்னும் கேப்டன் என இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. நேற்று முன்தினம் (19-07-18) மாலை வரை இருந்துள்ளது. இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கம் போல் தோனியின் ரசிகர்களும், கோஹ்லியின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பி.சி.சி.ஐ., கடுமையாக விமர்சித்து வருவதோடு, தங்களுக்குள்ளும் சண்டையிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here