வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், 2வது டி 20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி வெளுத்துகட்ட களமிறங்கியது. ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்களின் சிறந்த பந்து வீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி நிலை குலைந்தது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 106 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here