இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக குல்படின் நைப் , ரஹ்மத் ஷா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். பிறகு சிறிது நேரத்தில் வெறித்தனமாக அடித்தனர்.

சிறப்பாக விளையாடிய குல்படின் நைப் 12 பந்தில் 3 பவுண்டரி உட்பட 15 ரன்கள் மட்டுமே அடித்தார். பின்னர் களமிறங்கிய ஹஷ்மதுல்லா முதல் பந்திலே அவுட் ஆனார். அடுத்ததாக இக்ரம் அலி கில் களமிறங்க, இவருடன் ரஹ்மத் ஷா இணைந்து அணியின் ரன்களை சற்று உயர்த்தினர்.

Related image

 

12-வது ஓவரில் ரஹ்மத் ஷா 35 ரன்களுடன் வெளியேறினார்.பின்னர் மத்தியில் விளையாடிய அஸ்கர் ஆப்கான், நஜிபுல்லா ஸத்ரான் இருவரும் 42 ரன்கள் குவித்தனர்.இறுதியாக, ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் அடித்தனர்.

பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டையும் , இமாத் வாசிம், வஹாப் ரியாஸ் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 228 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here