ஆப்கானிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி-20 தொடர் இந்தியாவில் நடைபெற்றது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் இருந்தன.

இந்நிலையில், மூன்றாவது போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு அபாரமாக ஆடிய ரஹ்மானுல்லா குர்பாஜ் (79) அரைசதம் கடந்தார். ஆஸ்கர் ஆப்கன் (24), நஜிபுல்லா ஜத்ரன் (14), முகமது நபி (15) ஆகியோர் பக்கபலமாக இருக்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது.

இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பொறுப்பாக ஆடிய ஷாய் ஹோப் (52) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார்.

கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 34 ரன் தேவைப்பட்டபோது, 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி டி20 தொடரையும் கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here