ஈரான் நாட்டில் 40 ஆண்டுகளாக கால்பந்து மைதானத்தில் பெண்களை உள்ளே அனுமதிக்க மறுக்கப்பட்டு வந்தனர். இந்த சட்டம் தற்போது நீக்கப்பட்டு இனி பெண்களை அனுமதிக்க ஈரான் நாடு ஒப்புதல் அளித்துள்ளது.

ஈரானில் கால்பந்து போட்டியை ரசிக்க அண்மையில் பெண் ஒருவர் ஆண் வேடமிட்டு மைதானத்திற்குள் சென்று திரும்பியுள்ளார். இச்சம்பவம் தெரிய வந்தால் கடுமையான சிறைத் தண்டனை கிடைக்கும் என அஞ்சி தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த கோர சம்பவம் கால்பந்து சம்மேளனம் வரை சென்றுள்ளது. ஈரான் நாட்டிற்கு கால்பந்து சம்மேளனம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் உடனடியாக பெண்களை மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட ஈரான் அரசு இனி பெண்களை மைதானத்திற்குள் அனுமதிக்க சட்டம் இயற்றியது.

டெஹ்ரானில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டியை பெண்கள் நேரில் கண்டு ரசிக்கவுள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here