மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கொல்கத்தாவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார் சித்தேஷ் லாட்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் வர்த்தகம் செய்வதற்கான கெடு நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இதில் 2015ஆம் ஆண்டில் இருந்து சித்தேஷ் லாட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். மும்பை அணியில் ப்ளெயிங் லெவெனில் இவருக்கு பெரிதளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இனியும் கிடைக்க வாய்ப்புகள் குறைவு என்பதால், மும்பை அணி கொல்கத்தாவிற்கு வர்த்தகம் செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே மயங்க் மார்கண்டேவை வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here