புனேவில் நடைபெற்ற ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் புரவ் ராஜா, ராம்குமார் ராமநாதன் ஜோடி, சகநாட்டை சேர்ந்த அர்ஜுன் காதே, சாகேத் மைனேனி ஜோடியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான, முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் புரவ் ராஜா-ராம்குமார் ஜோடி டை பிரேக்கர் வரை சென்று கைப்பற்றியது.

இந்நிலையில், 2வது செட்டில் துவக்கத்தில் போராடி முன்னிலை பெற்றது அர்ஜுன்-சாகேத் ஜோடி. ஆனால், தனது அதிரடியான தாக்குதலால் மீண்டும் 6-3 என தன்வசப்படுத்தியது புரவ்-ராம்குமார் ஜோடி.

இதனால் புரவ் ராஜா, ராம்குமார் ஜோடி 7-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here