2019 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிஙை தேர்வு செய்தது. 49 ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த 85 ரன்கள் அதிகபட்சமாக இருக்கிறது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான பேர்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ராய் பாட்னர்சிப்பில் 116 ரன்கள் குவித்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித்  வீசிய 16வது ஓவரில் ஜேசன் ராய் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸ்ர்களை விளாசினார். பாட் கம்மின்ஸ் வீசிய 20வது ஓவரில் ராய் 85 ரன்களுடன் வெளியேறினார். இதில் ஜேசன் ராய் 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளை விளாசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here