இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும் மூன்றாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த போட்டி பிர்மிங்காம்மில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிஙை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் பின்ச் களமிறங்கினர். இதில் பின்ச் ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். டேவிட் வார்னருடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். ஆனால் மூன்றாவது ஓவரை வீசிய கிறிஸ் வோக்ஸின் நான்காவது பந்தில் டேவிட் வார்னர் 9 ரன்னில் விக்கெட் இழந்தார். இதன் பின் களமிறங்கிய பீட்டர் 4 ரன்னில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் விக்கெட் இழந்தார்.

அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்மித் ஜோடி சேர்ந்து ரன்களை உயர்த்தினர். இங்கிலாந்து அணி இவர்களின் ஜோடியை திணறிக்கொண்டு இருக்கும் போது அதில் ரஷித் தனது சிறப்பான பந்துவீச்சால் அலெக்ஸ் கேரியின் (46) விக்கெட்டை பெற்றார்.

இதையடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் (0), மேக்ஸ்வெல் (22), பாட் கம்மின்ஸ் (6), ஸ்டார்க் (29), பெஹ்ரெண்டோர்ஃப் (1), ஸ்மித் (85), லியோன் (5) ரன்கள் குவித்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 49வது ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்கள் குவித்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் பாட்னர்சிப்பில் 116 ரன்கள் குவித்தனர். ஸ்டார்க் வீசிய 17வது ஓவரில் 34 ரன்கள் அடித்து பேர்ஸ்டோவ் விக்கெட் இழந்தார். அடுத்த இரண்டு ஓவர்களிலே ஜேசன் ராயும் 85 ரன்களுடன் வெளியேறினார். இதன் பின் ஜோ ரூட் மற்றும் மோர்கன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

இதில் ரூட்  49 ரன்கள் மற்றும் மோர்கன் 45 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்து அணி 32.1 ஓவரிலே தனது இலக்கை எட்டி வெற்றியை பதிவு செய்தது. எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் நியூசீலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுவது உறுதி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here