ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் பெர்த் மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டனர். முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 6 ரன்களுக்கும், ரிஸ்வான் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேற மிகவும் தடுமாற்றம் கண்டது. அதற்கு அடுத்ததாக வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். கடந்த போட்டியில் அரைசதம் கண்ட இப்திகார் அகமது மட்டுமே அணிக்கு ரன் சேர்த்தார். இவரும் 45 ரன்களுக்கு வெளியேறினார்.

20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 106 மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் பின்ச் மற்றும் வார்னர் இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 11.5 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here