Babar Azam

நேற்று நடந்த 33வது லீக் போட்டியில் நியூசீலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்ச்பஸ்டன் மைதானத்தில்  நடைபெற்றது. இதில் டாஸ் நியூசீலாந்து அணி முதலில் களமிறங்கியது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 237 ரன்கள் பெற்றனர். இதில் கொலின் டி கிராந்தோம் 64 ரன்கள் மற்றும் நிஷாம் 97 ரன்கள் குவித்தனர்.

இதன் பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் தனது இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் பாபர் ஆசாம் 127 பந்துகளில் 101 குவித்துள்ளார். இதில் 11 பவுண்டரிகளை விளாசியுள்ளார். இந்த சதம் இவரின் முதல் உலகக்கோப்பை சதமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here