இன்றைய 31வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.இந்த போட்டி சவுத்தாம்டன் நகரில் இருக்கும் தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்படின் நைப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 16 ரன்னிலே விக்கெட் இழந்தார். இமாம் இக்பால் மற்றும் ஷகிப் அல் ஹாசன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த தொடங்கினர். குல்படின் நயிப் வீசிய பந்தில் இமாம் 36 ரன்களுடன் வெளியேறினார். முஷ்ஃபிகுர் ரஹீம் ஷகிப் அல் ஹாசனுடன் ஜோடி சேர்ந்தார். ஷகிப் தனது அரைசதத்தை (51) நிறைவு செய்து வெளியேறினார்.

இதன் பின் களமிறங்கிய சவுமியா சர்க்கார் (3), மஹ்முதுல்லா (27), மொசாடெக் ஹொசைன் (35) ரன்னில் வெளியேறினர். இறுதிவரை தனித்து நின்று அணியின் எண்ணிக்கையை உயர்த்திய முஷ்ஃபிகுர் ரஹீம் 83 ரன்கள் குவித்து வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 262 ரன்கள் குவித்தது பங்களாதேஷ் அணி.

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வயது வீரரான முஜீப் உர் ரஹ்மான் 3 முக்கிய வீரர்களின் விக்கெட்களை பறித்தார். பின் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்படின் நைப் 2 விக்கெட்களை பெற்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here