புரோ கபடியின் 7வது சீசனில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த அணிகள் நேரடியாக அரையிருதிக்கு முன்னேறின.

அதற்கு அடுத்து 4 இடங்கள் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றில் மோதின. இதில் வெல்லும் இரண்டு அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

இன்று நடைபெற்ற பிளே-ஆப் சுற்றின் முதல் போட்டியில் யுபி யோதா – பெங்களூரு புல்ஸ் இரு அணிகளும் மோதின. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் பெங்களூரு அணி 48-45 என்ற புள்ளி கணக்கில் வென்று அரையிருதிக்கு முன்னேறியது.

இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் யு மும்பா – ஹரியானா ஸ்டீலர்ஸ் இரு அணிகளும் மோதின. இதில் மும்பை அணி 46-38 என வெற்றி பெற்றது.

அரையிறுதியில், மும்பை-பெங்கால் மற்றும் பெங்களூரு-டெல்லி அணிகள் மோதுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here