இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. எனவே இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி இடம் பெற்று பல நிகழ்வுகளை ஏற்படுத்தினார். முகமது ஷமி தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஆட்த்தின் இறுதி ஓவரில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்களை பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது காயத்தில் இருந்து குணமடைந்த புவனேஷ்வர் குமார் வலை பயிற்சியில் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். ஆனால், இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட  மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இவரின் குணமடைதல் இங்கிலாந்து போன்ற அணியுடன் மோதும் நேரத்தில் இவர் வருகை அணிக்கு மீண்டும் பலத்தை சேர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here