மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா. இவருக்கு செவ்வாய்க்கிழமை அன்று மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு நெஞ்சு வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் பிரையன் லாரா மார்பு வலி குறித்து புகார் அளித்ததையடுத்து பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்று ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
#Mumbai: West Indies legend Brian Lara has been admitted to Global Hospital in Parel after he complained of chest pain. Hospital to issue a statement shortly. (file pic) pic.twitter.com/sGnvBpiavA
— ANI (@ANI) June 25, 2019
லாரா மும்பையில் ஐ.சி.சி உலகக் கோப்பை, ஸ்டார் ஸ்போர்ட்ஸின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களுடன் பணிபுரிந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று மதியம் 12.30 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டது. இது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.