மேற்கு இந்திய  தீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்  பிரைன் லாரா. உலக கோப்பை தொடர் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதை இந்தியாவில் ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.இதற்காக மும்பையில் தங்கியிருக்கிறார்.

ஆனால் பிரையன் லாரா நெஞ்சு வலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டார்.பின் இது தொடர்பாக பிரையன் லாரா விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,நான் வழக்கத்தை விட அதிகமாக உடற்பயிற்சி செய்தேன். அப்போது என் நெஞ்சில் திடீரென அழுத்தம் ஏற்பட்டது.வலி நீடித்ததால் மருத்துவமனைக்கு சென்றேன்.ஆனால்  மருத்துவச் சோதனையின் முடிவு நேற்றே வந்தது. அதில் பிரச்னை ஏதும் இல்லை என்று  மருத்துவர்கள் மகிழ்ச்சியோடு கூறினார்கள் என்று தெரிவித்தார்.

ஆனால்  மருத்துவமனையில் இருந்து நேற்று பகல் 12.20 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு திரும்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here