சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் காஷ்யப் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான விக்டர் ஆக்சல்செனை எதிர்கொண்டார்.

இதில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய காஷ்யாப், இறுதியில் 13-21, 19-21 என்ற நேர்செட்டில் தோல்வியை தழுவி வெளியேறினார்.

8வது சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டன்செனை எதிர்கொண்டார். இதில் முதலில் சிறப்பாக ஆடிய பிரனீத் பின்னர் ஒரு சில தவறுகளால் 20-22, 22-20, 16-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here