இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியும் மூன்றாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த போட்டி பிர்மிங்காம்மில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிஙை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் 223 ரன்கள் குழித்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மாத் அடித்த 85 ரன்கள் மட்டுமே அணியின் அதிகபட்ச ரன்னாகும். அலெக்ஸ் கேரி 46 ரன்கள் குவித்துள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் 8 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை பெற்றார்.

இதில் டேவிட் வார்னர், பீட்டர் மற்றும் ஸ்டார்க் ஆகியோரின் விக்கெட்களை பெற்றார். இவர் தனது ஓவரில் அதிகபட்சமாக 5 ரன்கள் மட்டும் கொடுத்துள்ளார். இவர் தனது 8வது ஓவரில் தொடர்ச்சியாக 2 விக்கெட்களை பெற்று 1 ரன் மட்டும் கொடுத்துள்ளார். இதன் பின் அதில் ரஷித் 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை பெற்றுள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர் 10 ஓவர்கள் வீசி 32 ரன்கள் கொடுத்க 2 விக்கெட்களை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here