வெஸ்ட் இண்டீஸில் முத்தரப்பு போட்டி நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த 14-வது போட்டியில் செயின்ட் கிட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.

முதலில் இறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 20ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக தொடக்க வீரரான லென்ட்ல் சிம்மன்ஸ் 45 பந்தில் 90 ரன்கள் குவித்தார்.

பின்னர் இறங்கிய செயின்ட் கிட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி டிராவில் முடிந்தது.இதில் அதிகபட்சமாக பிராத்வெயிட் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இப்போட்டி டிராவில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அணியில் லூயிஸ் ,  பிராத்வெயிட் இருவரும் இறங்கினர். நைட் ரைடர்ஸ் அணி சார்பில் அலி கான் பந்து வீசினார். பிராத்வெயிட் முதல் பந்தை சிக்ஸர் விளாசினார். 2-வது பந்தில் சிங்கிள் அடித்தார்.பின்னர் 3-வது பந்திலும் சிங்கிள் எடுத்ததால் மீண்டும் பேட்டிங் முனைக்கு  பிராத்வெயிட் வந்தார்.

பிராத்வெயிட் நான்காவது பந்தில் ரன் எடுக்ககவில்லை. 5-வது பந்தில் சிக்சரும், கடைசி பந்தில் பவுண்டரியும் விளாசினார். பிறகு நைட் ரைடர்ஸ் அணி இறங்கியது. பிராத்வெயிட் பந்து வீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்ததால் செயின்ட் கிட்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here