வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் , பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் ஆகிய அணிகள் மோதினர்.

டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி பந்து வீச முதலில் இறங்கிய பார்படாஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 140 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணி 18.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து  145 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணிவீரர் கிறிஸ் கெய்ல் 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.இதன் மூலம் டி20 போட்டிகளில் கிறிஸ் கெய்ல் 13,000 ரன்கள் கடந்து புதிய மைல்கல் சாதனையை படைத்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here