வெஸ்ட் இண்டீஸில் முத்தரப்பு போட்டி நடைபெற்று வருகிறது.இன்று அதிகாலை நடைபெற்ற 14-வது போட்டியில் செயின்ட் கிட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில் இறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 20ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான லென்ட்ல் சிம்மன்ஸ் 45 பந்தில் 90 ரன்கள் குவித்தார்.செயின்ட் கிட்ஸ் அணியில் கார்லோஸ் 2 விக்கெட்டை பறித்தார்.

பின்னர் இறங்கிய செயின்ட் கிட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி டிராவில் முடிந்தது.அதிகபட்சமாக எவின் லூயிஸ் 45 , கார்லோஸ் பிராத்வைட் 64 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.செயின்ட் கிட்ஸ் 19 ரன்கள் அடித்தனர்.ஆனால் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் செயின்ட் கிட்ஸ் அணி வெற்றி பெற்றது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here