இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அதில் 3 T20 போட்டிகள் முடிந்தது.அதில் இந்திய அணி 2-1 என்று இங்கிலாந்து அணியை  தோற்கடித்தது. அதன் பின் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

அதன்படி இன்று முதல்  ஒருநாள் போட்டி நடைபெற்றது.அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்த்து அணி 49.5ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக குலதீப் யாதவ் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதன் பின்பு களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.தவான் 40ரங்களில் ஆட்டமிழந்தார்.அதன் பின் கேப்டன் கோலி களமிறங்கினர்.ரோஹித் ஷர்மாவும் கோலியும் நிலைத்து நின்று ஆடினார்கள். பின்பு கோலி 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.ரோகித்சர்மா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சதம் அடித்தார்.இறுதியில் இந்திய அணி 40.1 ஓவரில் 269ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here