இலங்கை கிரிக்கெட் வீரர் மீது ஒரு வருட தடை !! காரணம் என்ன..?

கிரிக்கெட் வாரிய விதிமுறைகளை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி வான்டர்சே அடுத்த ஒரு வருடத்திற்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இலங்கை அணி கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குச் சுற்றுப்பயணம் சென்றி ருந்தது. அப்போது செயின் லூசியா நகரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி முடிந்தபின் அணி வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் இருந்து வெளியே சுற்றிப் பார்க்கச் சென்றனர்.

ஆனால், அவர்கள் அனைவரும் இரவு ஹோட்டலுக்குத் திரும்பிவிட்டனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஹோட்டலுக்கு வர வேண்டும் என்று அணி நிர்வாகம் உத்தரவிட்டும் அன்று இரவு வராமல், ஜெப்ரி வான்டர்சே மறுநாள் காலை ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

இது இலங்கை அணியின் ஒழுக்கநெறிமுறைகளுக்கு எதிராக வான்டர்சே நடந்து கொண்டார் என அணி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்போதே ஜெப்ரி வான்டர்சே மன்னிப்பு கோரினார்.

ஆனால், ஏற்கெனவே பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் கேப்டன் சந்திமால் சிக்கி, கடும் தண்டனை விதிக்கப்பட்டு அணியில் பெயர் கெட்டிருக்கிறது. இதில் வான்டர்சேவும் ஒழுக்கக் குறைவாக நடந்ததால், அதைத் தடுக்க முடிவு செய்து, இலங்கை வாரியம் கடும் தண்டனை விதித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ”அணியின் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட இலங்கை அணி வீரர் ஜெப்ரி வான்டர்சே அணியில் இருந்து ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அடுத்த ஒரு ஆண்டுக்கு வான்டர்சே எந்தவிதமான உள்நாட்டு, வெளிநாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஆண்டு ஒப்பந்த ஊதியத்தில் இருந்து 20 சதவீதத்தை அபராதமாகவும் செலுத்த உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here