உலக சாதனை படைத்தார் பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான பஹர் ஜமான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஜிம்பாப்வே அணியுடனான இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான பஹர் ஜமான் 20 ரன்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 1000 ரன்களை பூர்த்தி செய்தார்.

இது தவிர வெறும் 18 போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ள பஹர் ஜமான், ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக ரிச்சர்ட்ஸ் 21 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது இடத்திலும், கெவின் பீட்டர்ஸன் 3  இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்களில் விராட் கோஹ்லி 12வது இடத்திலும், ஷிகர் தவான் 13வது இடத்திலும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here