திண்டுக்கல்லில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் காரைக்குடி அணியை வீழ்த்தி கோவை அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

முதலில் டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பந்துவீச முடிவு செய்தது. இதில் துவக்க வீரர்களாக களமிறங்கிய அபினவ் முகுந்த் மற்றும் ஷாருக்கான் இருவரும் சற்று நல்ல துவக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரங்களுக்கு வெளியேற இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது கோவை கிங்ஸ் அணி.

 

எளிய இலக்கை துரத்திய காரைக்குடி அணி துவக்கம் முதலே ஆட்டம் காண ஆரம்பித்தது. கோவை அணி பந்துவீச்சில் திணறடித்தது.

இறுதியில் 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது காரைக்குடி அணியால், அந்த அணியின் வீரர் மான் பவ்னா மட்டுமே 40 ரானால் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது கோவை அணி. அங்கு மதுரை பாந்த்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here