டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் நெல்லையில் இன்று மோதுகின்றன.

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஜூன் 11-ந் தேதி தொடங்கி நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நேற்று முன்தினத்துடன் 28 லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தன.

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஜெகதீசன் (கேப்டன்), ஹரி நிஷாந்த், விவேக், சதுர்வேத், அனிருத், முகமது, அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, தோதாத்ரி.

மதுரை பாந்தர்ஸ்: டி.ரோகித் (கேப்டன்), அருண் கார்த்திக், தலைவன் சற்குணம், கார்த்திகேயன், நாதன், கவுசிக், ஷிஜித் சந்திரன், அபிஷேக் தன்வார், கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, ரஹில் ஷா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here