டி20 கிரிக்கெட் போட்டி போலவே டி10 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. ஒரு அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட இந்த தொடர் கடந்த ஆண்டு துவங்கியது.

இந்த தொடரில் மொத்தம் நான்கு அணிகள் கலந்து கொண்டது. இந்த வருடத்தின் கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. இந்த வருடம் மொத்தம் 6 அணிகள் பங்குபெறும். இதற்கான டி20 சூப்பர் ஸ்டார்களான பிரெண்டான் மெக்கல்லம், முஜிபுர் ரஹ்மான், மாலிக், சாகித் அப்ரிடி, சோயப் மாலிக், டேரன் சமி ஷேன் வாட்சன் ஆகிய பல டி20 நட்சத்திரங்கள் விளையாட உள்ளது.
சென்ற வருடம் விரேந்தர் சேவாக் கூட இந்த தொடரில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் ஏலம் வரும் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here