இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் கங்குலி என இருவரில் தனக்கு பிடித்த கேப்டன் யார் என்பதை ராபின் உத்தப்பா ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது உலகளவில் சிறந்து விளங்கி வருவதற்கு முன்னாள் கேப்டன்களான கங்குலியும், தோனியுமே காரணம் என்றால் மிகையாகாது.

கங்குலி உருவாக்கி கொடுத்த படையை தோனியும், தோனி உருவாக்கி கொடுத்த படையை கோஹ்லியும் வழிநடத்தி இந்திய அணியை கிரிக்கெட் வல்லரசாக்கினர்.

தோனியை அணியில் எடுத்ததே கங்குலி தான் என்றாலும், இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதம் அடிக்கடி எழும்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்ற்றிற்கு அளித்த பேட்டியில் அவரிடம் தோனி மற்றும் கங்குலி என இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு சற்றும் யோசிக்காத ராபின் உத்தப்பா, தோனியே தனக்கு பிடித்த கேப்டன் என்று ஓபனாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here