பார்சிலோனா கால்பந்து அணியின் புதிய கேப்டனாக லயோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் கிளப் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமாக அணி பார்சிலோனா. கடந்த 2015-இல் இருந்து கேப்டனாக இருந்தவர் இனிஸ்டா. இவர், தற்போது ஜப்பான் கிளப் அணியில் இணைந்துள்ளார்.

இதையடுத்து, அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2015-இல் இருந்து மெஸ்ஸி 2-ஆவது கேப்டனாக செயல்பட்டு வந்தார். தற்போது இனிஸ்டா இல்லாததால் வரும் லாலிகா தொடரில் இருந்து பார்சிலோனா அணியின் முழு நேர கேப்டனாக மெஸ்ஸி பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

செர்ஜியோ பஸ்குவெட்ஸ், கெரார்ட் பிக் மற்றும் செர்ஜி ரோபெர்டோ ஆகியோர் முறையே 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது கேப்டனாக பொறுப்பேற்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here