இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது . மூன்று T20 போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும்   ஐந்து டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது . இத்தொடர் ஜூலை 3 ம் தேதி இங்கிலாந்தில்   தொடங்குகிறது. முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி 20 போட்டிகளில் த ஒரு பெரிய வெற்றியை இந்தியா  பெற்றது.

இங்கிலாந்திற்கு எதிராக டி 20 தொடரில் இருந்து பந்துவீச்சாளர் பும்ராவும் , வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளனர். அயர்லாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் பயிற்சியின் போது  வாஷிங்டன்  காயம் அடைந்தார். அந்த காயம் காரணமாக அவர் இந்தியாவுக்கு திரும்பி வருகிறார். டி 20 போட்டியில் அவருக்கு பதிலாக  குருனல் பாண்டியாஅணியில் இடம்பிடித்துள்ளார்.Image result for washington sundar image

இதேபோல், இந்திய வேக பந்து வீச்சாளர் பும்ராவுக்கு   அயர்லாந்துக்கு எதிராக முதல் டி 20 போட்டியில் கையில் காயம் ஏற்பட்டது. அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால்,  T20 தொடரில் பங்கேற்க மாட்டார் ஆனால் அவர் ஒரு நாள் போட்டி தொடங்குவதற்குள் குணமடைந்துவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பும்ரா அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here