இந்திய அணியின் தொடர் தோல்வியை தொடர்ந்து நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகியுள்ளார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது வலது கை விரலில் காயம் ஏற்பட்டது ஒரேயொரு டி20 போட்டி ஆடிய நிலையில் அவர் அப்படியே தொடரில் இருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் டி20 தொடரில் ஆடவில்லை, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கோப்பை தொடரிலும் ஆடவில்லை.

காயம் சரியாகிவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரை அவரது காயம் சரியாகாமல் இழுத்தடித்தது.

தற்போது அவரது விரலில் ஏற்பட்ட காயம் முழுவதும் குணம் அடைந்து விட்டதாகவும் அவரது உடல் சரியான முறையில் பிட்டாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது இதனால் வரும் 18ம் தேதி நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடுவார் என தெரிகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here